நீ என்ன தினசரி பத்திரிகையா ..?
தலைப்பு செய்திபோல் திடீரென பேசுகிறாய் ...
சிறு விளம்பர பகுதி போல் சில நேரம் பேசுகிறாய் ...
நடுப்பகுதிபோல் சில வேளை கவர்ச்சியாக பேசுகிறாய் ...
மரண அறிவித்தல் பகுதி போல் மௌனமாக இருக்கிறாய் ...
காதல் ஒன்றும் வணிகப்பகுதியல்ல ....
அடிதடியாக பேசும் அரசியல் பகுதியுமல்ல ...
விளையாட்டாக எடுக்க விளையாட்டு பகுதியுமல்ல....
வாழ்க்கையும் ஆரோக்கியமும் பகுதிபோல் ....
நம் காதல் இருக்க வேண்டுமடி ...!
No comments:
Post a Comment