Monday, April 29, 2013
விடியல் காண இயலா தருணம்...
!! "விடியல் காண இயலா தருணம்" !!
என் தனிமையை உணர்கிறேன்......!
என் கண்ணீர் துளிகள்,,,,,
தரையை தொடும் தருணத்தில்......!!!
சோகம் உணர்கிறேன்......!
என்னை சுற்றி,,,,,
யாரும் இல்லா தருணத்தில்.....!!!
இப்படி தான் பெண்ணே,,,
நான் இருப்பது,,,,
கல்லறை என்று உணர்ந்தேன்....!
உன் விழி என்னும்,,,,
விடியல் காண இயலா தருணத்தில்
Saturday, April 27, 2013
நீ என்ன தினசரி பத்திரிகையா ..????
நீ என்ன தினசரி பத்திரிகையா ..?
தலைப்பு செய்திபோல் திடீரென பேசுகிறாய் ...
சிறு விளம்பர பகுதி போல் சில நேரம் பேசுகிறாய் ...
நடுப்பகுதிபோல் சில வேளை கவர்ச்சியாக பேசுகிறாய் ...
மரண அறிவித்தல் பகுதி போல் மௌனமாக இருக்கிறாய் ...
காதல் ஒன்றும் வணிகப்பகுதியல்ல ....
அடிதடியாக பேசும் அரசியல் பகுதியுமல்ல ...
விளையாட்டாக எடுக்க விளையாட்டு பகுதியுமல்ல....
வாழ்க்கையும் ஆரோக்கியமும் பகுதிபோல் ....
நம் காதல் இருக்க வேண்டுமடி ...!
Friday, April 26, 2013
Subscribe to:
Posts (Atom)