Friday, August 16, 2013


பூ ஒன்றும் காணாமல் நான் வாடினேன் 
நம்பிக்கை இழக்காமல் நான் தேடினேன் 
எனக்காக ஒரு பூ எங்கேயோ பூத்திருக்கும் 
பறிக்கநான் வருவேனென்று எனக்காகக் காத்திருக்கும்..!


Friday, July 12, 2013


♥♥ன் பொழுதுகள் யாவும் உன்னோடு...! 
என் நிழலும் ஓடும் உன் பின்னோடு...! 
காற்றோடு காற்றாய் நான் கலந்தாலும்...!
என்றும் காதல் சொல்வேன்...!♥♥♥

Saturday, July 6, 2013

அழகான இரவு நேரம்


ழகான இரவு நேரம்.
கண்கள்  உறங்கும்  நேரம்.
கனவுகள்  மலரும்  நேரம்.
உங்கள்   உறவுகள்  சொல்லாவிட்டாலும்.
உரிமையோடு  நான்  சொல்கிறேன். 
இரவு வணக்கம் அத்துடன்  இனிமையான கனவுகள்...


Monday, May 6, 2013




ரணப் படுக்கையில் 
மனு ஒன்று அனுப்பினேன் 
மறு படியும் பிறந்தால் 
மானுட பிறவி வேண்டாம் !!
மாதுவை விரும்பி 
மதுவுக்குள் விழுந்து 
மரணித்து போவதை விட 
மறுபடியும் பிறக்காது இருப்பதே மேல் !

Monday, April 29, 2013

அவள் மனது...


துவரை நான் படிக்காத புத்தகம்

'அவள் மனது'

வானத்து நிலவு


பகலில் உறங்கிடுவாள்
இரவில் எனக்காக கண்விழித்து
என் கவிதையை ரசிப்பாள்
யார் அவள்

"வானத்து நிலவு"

விடியல் காண இயலா தருணம்...



!! "விடியல் காண இயலா தருணம்" !! 
என் தனிமையை உணர்கிறேன்......! 
என் கண்ணீர் துளிகள்,,,,, 
தரையை தொடும் தருணத்தில்......!!! 
சோகம் உணர்கிறேன்......! 
என்னை சுற்றி,,,,, 
யாரும் இல்லா தருணத்தில்.....!!! 
இப்படி தான் பெண்ணே,,, 
நான் இருப்பது,,,, 
கல்லறை என்று உணர்ந்தேன்....! 
உன் விழி என்னும்,,,, 
விடியல் காண இயலா தருணத்தில்

Saturday, April 27, 2013

நீ என்ன தினசரி பத்திரிகையா ..????



நீ என்ன தினசரி பத்திரிகையா ..?

தலைப்பு செய்திபோல் திடீரென பேசுகிறாய் ...
சிறு விளம்பர பகுதி போல் சில நேரம் பேசுகிறாய் ...
நடுப்பகுதிபோல் சில வேளை கவர்ச்சியாக பேசுகிறாய் ...
மரண அறிவித்தல் பகுதி போல் மௌனமாக இருக்கிறாய் ...
காதல் ஒன்றும் வணிகப்பகுதியல்ல ....
அடிதடியாக பேசும் அரசியல் பகுதியுமல்ல ...
விளையாட்டாக எடுக்க விளையாட்டு பகுதியுமல்ல....
வாழ்க்கையும் ஆரோக்கியமும் பகுதிபோல் ....
நம் காதல் இருக்க வேண்டுமடி ...!

காதல் காட்டுக்குள் ♥♥♥



காதல் காட்டுக்குள் ...

நுளைந்து விட்டேன் ...
மீள முடியாமல் 
திக்கு முக்காடுகிறேன்...
போகத் தெரிந்த எனக்கு
வரும் பாதை தெரியவில்லை 
உன்னையும் உன் நினைவுகளையும்
சுற்றிக்கொண்டே ..திரிகிறேன் ...
தூரத்தில் ஒரு பாதை தெரிகிறது ...
தொடர்ச்சியா ..? முடிவா தெரியவில்லை ..?

Friday, April 26, 2013

'தெருவிளக்கு'


விடிந்து விட்டது
இனி நிம்மதியாய் 
உறங்கலாம்!
'தெருவிளக்கு'

வெற்றுத்தாளில் என் கவிதை...

ழுதிய எழுத்துக்களை 
எடுத்து செல்கின்றன 
எறும்புகள் 
உற்றுப் பார்க்கிறேன் 
அவள் மனதைப்போல 
வெறுமையாய்
வெற்றுத்தாளில் 
என் கவிதை......!

ஏழை ஆனேன்..!

நானும் செல்வந்தனாக
தான் இருந்தேன்  
அவளை காதலிக்கும் போது...
அவள் புன்னகை தான்
நான் சேமித்து
வைத்திருந்த செல்வம்
அவள் என்னை
விட்டு பிரிந்ததால் இப்போது 
நான் ஏழை ஆனேன்..!